2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் மத்திய அமைச்சரவை அனுமதி 30 லட்சம் பேர் பயனடைவர்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கூட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸை கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது

Update: 2020-10-22 04:52 GMT
புதுடெல்லி: 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.  கூட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸை கொடுக்க  ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்வே, தபால் துறை, பாதுகாப்புத் துறை, பி.எப், இஎஸ்ஐ முதலான நிறுவனங்களின் சுமார் 16.97 நான்-கெஸடெட் பணியாளர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும். இதற்கான மொத்த நிதித் தேவை ரூ.2,791 கோடியாக இருக்கும்.

மறுபுறம், பி.எல்.பி அல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக போனஸ் வழங்கப்படுகிறது நான்-கெஸடட் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் 13.70 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் 946 கோடி ரூபாய் அதற்கான நிதியாக் இருக்கும்.

வழக்கமாக, நவராத்திரிக்கு முன்னரே, முந்தைய ஆண்டில் அவர்களின் செயல்திறனுக்காக நான்-கெஸடட் ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்கப்படுகிறது. தற்போது இந்த ஆண்டு இந்த போன்ஸ் உடனடியாக வழக்கப்பட வெண்டும் என அரசு கூறியுள்ளது.

போனஸ் அறிவிப்பால் மொத்தம் 30.67 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்கான நிதித் தேவை ரூ .3,737 கோடியாக இருக்கும்.

போனஸ் ஒரே தவணையில், நேரடி பரிமாற்றம் மூலம், விஜயதாசாமிக்கு முன் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறினார். 

மேலும் செய்திகள்