இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்

பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.

Update: 2020-10-23 00:50 GMT
மும்பை,

பீகார் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, தடுப்பூசியை பெருமளவு உற்பத்தி செய்ய விஞ்ஞானிகள் அனுமதி அளித்தவுடன், பீகார் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்கச் செய்வோம் என்று அவர் கூறினார். பாஜகவின் இத்தகைய அறிவிப்பு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் சிவசேனா கட்சியும் கடுமையாக சாடியுள்ளது. 

சிவசேனா கட்சி செய்தித்தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது:-

தடுப்பூசி இன்னும் வரவே இல்லை. அதற்குள் பா.ஜனதாவின் தேர்தல் கால வார்த்தை ஜாலங்களில் தடுப்பூசி இடம்பெற்று விட்டது. எல்லா மாநில மக்களையும் சமமாக பார்ப்பது மத்திய அரசின் பொறுப்பு இல்லையா? இந்த வாக்குறுதி, பீகாருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி நிதிதொகுப்பு அளிப்பதாக கொடுத்த வாக்குறுதி போன்றதா? இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்