கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை மீண்டும் சோதனை செய்தது இந்தியா

கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்தது.;

Update:2020-10-30 19:00 IST
புதுடெல்லி,

கப்பலை தாக்கி அழிக்கும் சோதனையை, இந்திய கடற்படை நடத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணையை தாங்கி செல்லும் ஐஎன்எஸ் கோரா கப்பலில் இருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை ஏவி சோதனை செய்யப்பட்டது. 

வங்கக் கடலில் நீண்ட தூரத்தில் இருந்த இலக்கை, துல்லியமாக தாக்கியது எனத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்தியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்