உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழப்பு: யோகி ஆதித்யநாத் இரங்கல்

உத்தரபிரதேசத்தில் பிரதாப்கர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.;

Update:2020-11-20 08:55 IST
லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் மணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரயாகராஜ்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீரென காரும் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் இந்த விபத்து நடந்துள்ளது.

படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்  உயர் அதிகாரிகளை அந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்