கூகுள் நிறுவனத்தின் செயலிகள் சிறிது நேரம் முடக்கத்திற்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியது

உலகம் முழுவதும் கூகுள் நிறுவனத்தின் செயலிகள் சிறிது நேரம் முடக்கத்திற்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியது

Update: 2020-12-14 13:31 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் செயலிகள் இன்று மாலை உலகம் முழுவதும் முடங்கின. 

சுமார் 15 நிமிடங்களாக கூகுள் பிளே ஸ்டார், ஜிமெயில், யுடியூப், கூகுள் பே, கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட செயலிகள் செயல்படவில்லை. கூகுளின் சில வலைத்தளங்களும் முடங்கின. இதனால் உலகம் முழுவதுமுள்ள கூகுள் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனிடையே #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின.

இதனைத்தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சர்வர் முடங்கியுள்ளதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூகுள் நிறுவனம் விளக்கம் தெரிவித்தது. அதேபோன்று கோளாறு சரி செய்யப்பட்டு பிரச்னை குறித்து தெரிவிக்கப்படும் என யுடியூப் நிறுவனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், கூகுள் சேவைகள் முடங்கிய சில நிமிடங்களிலேயே செயலிகள் படிப்படியாகத் செயல்படத் தொடங்கின. 

மேலும் செய்திகள்