பறவைக்காய்ச்சல்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

நாட்டில் மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

Update: 2021-01-23 22:57 GMT
மும்பை, 

நாட்டில் மராட்டியம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பறவைக்காய்ச்சலுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஐ.) வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, மக்கள் அரை வேக்காட்டு முட்டை, நன்கு வேகாத கோழி இறைச்சியை சாப்பிடக்கூடாது, சமைக்காத இறைச்சியை வீட்டில் திறந்தநிலையில் வைக்கக்கூடாது. 

வியாபாரிகள், இறந்த பறவையினங்களை வெறுங்கைகளால் தொடக்கூடாது. ஆனால் கோழி வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சமடையத் தேவையில்லை. பறவைக்காய்ச்சல் வைரஸ், 70 டிகிரி வெப்பநிலையில் வெறும் 3 வினாடிகளில் இறந்துவிடும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்