பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் இல்லை: ரிசர்வ் வங்கி விளக்கம்

பழைய வரிசை ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

Update: 2021-01-26 00:34 GMT
ரிசர்வ் வங்கி
தகவல்
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன.

அத்துடன், கள்ள நோட்டுகளை தடுக்க பழைய வரிசை ரூபாய் நோட்டுகளை அவ்வப்போது திரும்பப்பெற்று புதிய வரிசை நோட்டுகளை வெளியிடுவது ரிசர்வ் வங்கியின் வழக்கம்.

அதுபோல், புழக்கத்தில் உள்ள பழைய வரிசையை சேர்ந்த ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் திரும்பப்பெற உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

மறுப்பு
இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், அதற்கு ரிசர்வ் வங்கி நேற்று மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பழைய வரிசை ரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகள் விரைவில் திரும்பப்பெறப்பட உள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் சரியல்ல. அப்படி எந்த திட்டமும் இல்லை.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் பிரிவும் இந்த தகவலை மறுத்துள்ளது.

மேலும் செய்திகள்