உத்தரபிரதேசத்தில் இதுவரை 5 கோடி பேருக்கு கொரொனா பரிசோதனை

உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை 5 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.;

Update:2021-06-03 00:52 IST
லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று 1,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 93 ஆயிரத்து 992 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பால் நேற்று 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 16 லட்சத்து 44 ஆயிரத்து 511 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது.

நாட்டிலேயே 5 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது.



மேலும் செய்திகள்