ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது கல் வீச்சு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.;

Update:2021-06-04 14:55 IST
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் க்ரல் போரா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.  இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-  கொரோன தொடர்பான பணிகளுக்காக மத்திய ரிசர்வ் படை வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, க்ரல்போரா என்ற இடத்தில் மர்ம நபர்கள் சிலர் வாகனத்தை சூழ்ந்து கொண்டு கல் வீசி தாக்குதல் நடத்தினர்.  இதனால், அவர்களை விரட்டியடிக்க வானத்தை நோக்கி 2-3 முறை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை” என்றனர். 

மேலும் செய்திகள்