அசாமில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 2 பேர் கைது

அசாமில் சர்வதேச அளவில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 250 கிராம் கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-10 18:44 GMT


கம்ரூப்,

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கம்ரூப் நகர போலீசார், உளவு தகவல் அடிப்படையில் சோதனை நடத்தி 2 பேரை கைது செய்தனர்.

இதில், அந்த நபர்களிடம் இருந்து 250 கிராம் அளவுள்ள ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  இதன் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.1.5 கோடி ஆகும் என தெரிவித்து உள்ளார்.  கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்