150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை; மீட்கும் பணி தீவிரம்
ஆக்ரா அருகே உள்ள கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
ஆக்ரா:
ஆக்ரா அருகே உள்ள தாராயாய் கிராமத்தில் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, ஐந்து வயது குழந்தை 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டது. குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையின் தந்தை சோட்டாலால் தோண்டிய போர்வெல்லில் குழந்தை விழுந்ததாக கிராமத்தினர் கூறி உள்னர்.
ஆக்ரா கிராமப்புறத்தில் உள்ள பதேஹாபாத்தில் உள்ள நிபோஹாரா போலீஸ் நிலையத்ற்குட்பட்ட பகுதியில் இன்றுகாலை 8:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறும் போது "இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததிலிருந்து குழந்தையை மீட்கும் பணி தொடர்கிறது.எங்கள் கேள்விகளுக்கு குழந்தை பதிலளித்து வருகிறது என கூறினார்.