சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து மம்தா மனு- கொல்கத்தா ஐகோர்ட் இன்று விசாரணை

நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, மம்தா பானர்ஜி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Update: 2021-06-18 02:21 GMT
கொல்கத்தா,

 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த மே மாதம் 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 210-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில், முதல் மந்திரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, புர்பா மெட்னிபுர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். 
குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து,  மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு,  இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்