கொரோனா 3-வது அலை அச்சம்...? கம்மம் மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 1480 குழந்தைகள் பாதிப்பு.!

மாவட்ட மருத்துவமனை அதிகாரி டாக்டர் பி மாலதி, மாவட்டத்தில் குழந்தைகள் மீட்பு விகிதம் இன்று வரை 100 சதவீதமாக உள்ளது என கூறினார்.

Update: 2021-06-22 09:17 GMT
Image courtesy : AP
கம்மம்: 

மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், தெலுங்கானா கம்மம் மாவட்டத்தில் 0 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது,

அதிகாரப்பூர்வ  வட்டாரங்களின் தகவல் படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்தம் 800 குழந்தைகள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது ஜூன் மாதத்தில் திங்கள்கிழமை வரை 1,480 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்த வீட்டுக்கு வீடு வீடாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வநதுள்ளது. கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் பதிவான மொத்த 16,302 பாதிப்புகளில் 1,480 குழந்தைகள். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை மட்டுமே காட்டு வதால் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், மிதமான அறிகுறிகளைக் கொண்ட அந்த  குழந்தைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைமைமருத்துவமனை கொரோனா  வார்டுக்கு மாற்றியுள்ளனர். 

இதுகுறித்து கருத்து தெர்வித்த மாவட்ட மருத்துவமனை  அதிகாரி  டாக்டர் பி மாலதி, மாவட்டத்தில் குழந்தைகள் மீட்பு விகிதம் இன்று வரை 100 சதவீதமாக உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்