பாஜகவுடன் கூட்டணி என்னும் பேச்சுக்கே இனி இடமில்லை: சிவசேனா எம்.பி.
பாஜகவுடன் கூட்டணி என்னும் பேச்சுக்கே இனி இடமில்லை என சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.;
மும்பை,
மராட்டியத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சிவசேனா கட்சி சந்தித்தது. வெற்றி பெற்ற இந்த கூட்டணியில் முதல் மந்திரி பதவி குறித்த சிக்கல் ஏற்பட்டது. இதனால், சிவசேனா கூட்டணியை முறித்து கொண்டது.
இதன்பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணியாக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், அககட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என கூறினார்.
அவர் தொடர்ந்து, ஆயினும் சிவசேனா தலைவர் தாக்கரே குடும்பத்திற்கு பிரதமருடனான உறவு மரியாதைக்குரியது. அன்பு நிறைந்தது. மோடி நாட்டின் பிரதமர். எங்களுக்கு அவருடன் தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை.
நாங்கள் கூட்டணியிலிருந்து விலகினோம் என்பதற்காக அவர் எங்களது எதிரி என்றாகிவிடாது. மோடி நாட்டின் தலைவர். எனவே மராட்டியத்திற்கு அவர் தேவை. மாநிலம் இக்கட்டான நிலையிலிருக்கும்போது அவர் உதவுவார் என கூறியுள்ளார்.