மத்திய மந்திரி சபை இன்று மாலை விஸ்தரிப்பு: புதிதாக 43 பேர் பதவியேற்க வாய்ப்பு
மத்திய மந்திரிகளாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.;
புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் அமைந்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய மந்திரி சபை இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மந்திரி சபை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய மந்திரிகளாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மந்திரிகளாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் எம்.பிக்கள் பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையே, மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார் ராஜினமா செய்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்தவரும் மத்திய ரசாயனத்துறை மந்திரியுமான சதானந்த கவுடாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.