பயங்கரவாதிகளுடன் தொடர்பு: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்கள் 11 பேர் பணி நீக்கம்

பல்வேறு துறைகளில் பணியாற்றிய 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Update: 2021-07-10 14:37 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 11 அரசு  ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை,  பள்ளி ஆசிரியர்கள் என அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய 11 பேருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து பணி நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை நிறுவிய சையது சலாலுதினின் மகன்களும் அடங்குவர்.  பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்த குற்றச்சாட்டில் ஷையது அகமது ஷாகில் மற்றும் ஷாகித் யூசுப் ஆகிய இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத இயக்கங்களுடன் அரசு  ஊழியர்களே  கை கோர்த்து செயல்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்