‘கோவின்’ தொழில்நுட்பம் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்
‘கோவின்’ தொழில்நுட்பம் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.;
புதுடெல்லி,
ஜி-20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மாநாடு நடந்து வருகிறது. அதன் இரண்டாம் நாள் கூட்டமான இன்று, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில்,
தடுப்பூசி பணிக்காக இந்தியா உருவாக்கிய ‘கோவின்’ வலைத்தளம் தடுப்பூசி பணிக்கு எவ்வளவு உறுதுணையாக இருக்கிறது என்பதை விளக்கிக் கூறினார். கோவின் தொழில்நுட்பம் எல்லா நாடுகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஏனென்றால், இந்தியாவுக்கு வர்த்தக பலன்களை விட மனிதாபிமானம்தான் முக்கியம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.