இந்தியாவில் நேற்றைவிட சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-18 04:20 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் நேற்றை கொரோனா பாதிப்பை விட இன்று 7.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 157 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 06 ஆயிரத்து 065 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 518 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,13,609 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 42,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 02 லட்சத்து 69 ஆயிரத்து 796 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.31 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,22,660 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 40,49,31,715 ஆக அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்