மும்பையில் சுவர் இடிந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு

மும்பையில் தொடர் கன மழையால் விக்ரோலி பகுதியில் சுவர் இடிந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.;

Update:2021-07-18 13:25 IST
மும்பையில் சுவர் இடிந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி,

மும்பையில் கடந்த 24 மணி நேரமாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மும்பையின் தாழ்வான தெற்கு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கனமழை காரணமாக மும்பையில் செம்பூர் மற்றும் விக்ரோலி ஆகிய இடங்களில் வீட்டின் சுற்று சுவர் சரிந்து விழுந்ததில் 15 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. 

இந்தநிலையில் மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 25 அக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்,சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி தேசிய நிவாரணத்திலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்