ஜிகா வைரஸ்; கேரளாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வு

கேரளாவில் ஜிகா வைரசால் கூடுதலாக 3 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது என சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

Update: 2021-07-22 21:30 GMT


திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் பாதிப்பு முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.  நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இந்த பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும்.

கொசுக்களின் வழியே பரவ கூடிய இந்த தொற்றுக்கு கேரளா அதிக இலக்காகி உள்ளது.  இந்த ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பில் முதல் நோயாளியும், அடுத்த 13 சுகாதார ஊழியர்களும் அனயாராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் கேரளாவில் நேற்று முன்தினம் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. ஜிகா வைரஸ் பாதிப்புக்கு 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.

இந்நிலையில், கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று (வியாழ கிழமை) கூறும்போது, ஜிகா வைரசுக்கு 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்