உத்தர பிரதேச சாலை விபத்து: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் - பிரதமர் மோடி அறிவிப்பு

உத்தர பிரதேச சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Update: 2021-07-28 04:35 GMT
புதுடெல்லி,

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ-அயோத்யா தேசிய நெடுஞ்சாலை பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதி பகுதியில் பிகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சென்ற பேருந்து ஒன்று பழுது ஏற்பட்டதை அடுத்து சாலை ஒரமாக நிறுத்தப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்தின் முன்பக்கத்தில் சாலையில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியுள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தின் பின்புறம், வேகமாக வந்த லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்புக்கம் படுத்திருந்த தொழிலாளர்கள் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

உத்தர பிரதேசத்தை உலுக்கிய இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்