பிரபல வரலாற்று ஆசிரியர் பாபாசாகேப் புரந்தரே 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்

பத்ம விபூஷன் விருது பெற்றவரான பாபாசாகேப் புரந்தரே இந்த நன்நாளில் தனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.;

Update:2021-07-30 04:21 IST
புனே, 

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்றவர் வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான பல்வந்த் மோரேஷ்வர் என்ற பாபாசாகேப் புரந்தரே. இவர் நேற்று முன்தினம் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பத்ம விபூஷன் விருது பெற்றவரான பாபாசாகேப் புரந்தரே இந்த நன்நாளில் தனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் 100 ஆண்டு கால வாழ்க்கை பயணம் தனக்கு நிறைய பாடங்களை கற்று கொடுத்துள்ளது என்றார்.

இதேபோல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார்.

இதுகுறித்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “100-வது பிறந்தநாளை கொண்டாடும் பாபாசாகேப் புரந்தரேக்கு எனது அன்பான மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துக்கள்” என்று கூறியிருந்தார்.

பாபாசாகேப் புரந்தரே எழுதிய வரலாற்று நாடகமான “ஜந்தா ராஜா” 200-க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நாடகமாக நடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இவருக்கு 2015-ம் ஆண்டு மகாராஷ்டிர பூஷன் விருதும், 2019-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்