‘பெகாசஸ்’ உளவு விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்: மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-;
நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அவநம்பிக்கையும், மோதலும் நிலவி வருகிறது. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சரிவர செயல்பட முடியவில்லை.‘பெகாசஸ்’ உளவு விவகாரமும் சூட்டை கிளப்பி வருகிறது. இருந்தாலும், விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இல்லை என்பதால் நாடே கவலை அடைந்துள்ளது. ஆகவே, ‘பெகாசஸ்’ விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து, தனது கண்காணிப்பில் விசாரணை நடத்தச் செய்ய வேண்டும். அதன்மூலம் நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.