குஜராத் தேசிய பூங்காவில் ஆயிரக்கணக்கான மான்கள், சாலையை கடக்கும் அழகுக்காட்சி; வீடியோ வைரலானது; மோடி பாராட்டு

நமது நாட்டில் அழிந்து வருகிற இனமாக கலைமான்கள் உள்ளன. இவை, வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அட்டவணை ஒன்றின்கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Update: 2021-07-30 01:35 GMT
சாலையை கடந்த மான்கள்
குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தில் அழிந்து வருகிற கலைமான்களுக்கான தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்கா, கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மாதம் 15-ந் தேதி மூடப்பட்டது. அக்டோபர் மாதம் 16-ந் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் இங்கு வந்து துள்ளி ஓடும் மான்களை கண்டுகளிக்க முடியாத நிலை உள்ளது.இந்த நிலையில் இந்த பூங்கா பகுதியில் உள்ள சாலையை ஆயிரக்கணக்கான கலைமான்கள் கூட்டம், கூட்டமாக கடந்தன. மான்கள் துள்ளி ஓடி சாலையை கடக்கும் அழகுக்காட்சி, பார்வையாளர்களின் கண்களுக்கு அற்புதமான விருந்தாக அமைந்தது.

மோடியும் பார்த்தார்
இதை படம் எடுத்தவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். குஜராத் செய்தித்துறையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் இந்த வீடியோ வெளியானது. அதில் “3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள், பாவ்நகர் கலைமான்கள் தேசிய பூங்கா சாலைகள் அருகே சாலையைக் கடந்தன” எனவும் கூறப்பட்டிருந்தது.ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவை பிரதமர் மோடியும் பார்த்துள்ளார். “அருமை” என அவர் பாராட்டியும் உள்ளார்.

மேலும் செய்திகள்