மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 3 கோடி தடுப்பூசிகள் இருப்பு உள்ளது - மத்திய அரசு

நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் மொத்தம் 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-08-01 20:47 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

நாட்டில் உள்ள 36 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 49.49 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது.

இவற்றில் 46 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்து 662 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

தற்போது மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும், தனியார் ஆஸ்பத்திரிகளிடமும் 3 கோடியே 58 ஆயிரத்து 190 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.

இந்த நிலையில் மேலும் 8 லட்சத்து 4 ஆயிரத்து 220 தடுப்பூசிகளை வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று இதைத் தெரிவித்தது.

மேலும் செய்திகள்