மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.2 ஆக பதிவு
மேகாலயாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.;
மேகாலயா,
மேகாலயா மாநிலம் நொங்போ பகுதிக்கு வடகிழக்கே 33 கிமீ தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.