சிரியாவில் பயங்கரவாத தாக்குதல்: வீரர் உயிரிழப்பு; 3 வீரர்கள் காயம்

சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 3 வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.;

Update:2021-08-18 04:30 IST


அலெப்போ,

சிரியாவில் அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.  ரஷ்யாவால் தடை செய்யப்பட்ட ஜபத் அல்-நுஸ்ரா என்ற பயங்கரவாத அமைப்பு சிரியாவின் இத்லிப் மற்றும் அலெப்போ மாகாணத்தில் சிறிய அளவிலான பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், டெல் அனிப் மற்றும் அய்ன் டக்னா ஆகிய பகுதிகளின் அருகே அரசு படைகள் மீது நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  3 வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.

இதனை ரஷ்ய நாட்டு பாதுகாப்பு அமைச்சக மையத்தின் துணை  தலைவர் வாடிம் குலித் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்