பஞ்சாப்; தனி கட்சி தொடங்க போகிறாரா அமரிந்தர் சிங்...?

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் தனி கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2021-10-02 05:42 GMT
சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அவர் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களும் சில பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கேப்டன் அமரிந்தர் சிங்கின் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது..

சில விவசாய சங்கத் தலைவர்களையும் தனது கட்சியில் அவர் சேர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனிக்கட்சி தொடங்கிய பின், பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிடுவது குறித்தும் அவர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் தனது அடுத்த டெல்லி பயணத்தின்போது கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப்பில் காங்கிரஸின் முகமாக இருந்து வந்த அமரிந்தர் சிங், கட்சியில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெருத்த பின்னடைவு என்று அம்மாநில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள்  அதிக பலம் பெறும்  எனவும் தெரிவித்துள்ளனர்.
 




மேலும் செய்திகள்