கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கும் இலங்கை

கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவிடம், இலங்கை ரூ.3,750 கோடி கடன் கேட்டுள்ளது.

Update: 2021-10-18 00:29 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

இலங்கையில் கொரோனா காரணமாக சுற்றுலா துறை வருமானம் சரிந்து விட்டதால், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து விட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.6 சதவீதம் குறைந்து விட்டது. அதே சமயத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், அதன் இறக்குமதிக்கு செலவிடும் தொகை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 41 சதவீதம் அதிகரித்து விட்டது. கச்சா எண்ணெய் செலவினத்துக்காக 2 அரசு வங்கிகளிடம் இலங்கை பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் ரூ.24 ஆயிரத்து 750 கோடி கடன் பட்டுள்ளது.

இந்த பின்னணியில், கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவிடம் இலங்கை ரூ.3 ஆயிரத்து 750 கோடி கடன் கேட்டுள்ளது. இதற்காக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திடம் பேசி வருவதாக எண்ணெய் நிறுவன தலைவர் சுமித் விஜேசிங்கே தெரிவித்தார். இந்த கடன் ஒப்பந்தத்தில், இருநாட்டு எரிசக்தி செயலாளர்களும் விரைவில் கையெழுத்திடுவார்கள் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்