இந்தியா பாகிஸ்தான் போட்டி - ஒடிசாவின் பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்

உலகக் கோப்பை டி 20 இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திற்கு குட் லக் தெரிவித்து ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-24 12:40 GMT
புவனேஸ்வர்,

துபாயில் நடைபெறும் ஐசிசி ஆண்களுக்கான டி 20 உலகக் கோப்பைக்கான சூப்பர்-12 சுற்றில் இந்திய அணி இன்று தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும். 

பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சி பிழம்பாகி விடுவார்கள். அதுவும் இது உலக கோப்பை என்பதால் இன்று போட்டி அனல் பறக்கும். பல ரசிகர்கள் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு வழிபாடுகளும் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்காக ஒரு சிறப்பு மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். அந்த மணல் சிற்பத்தின் புகைப்படத்தை டுவிட்டரிலும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர், "ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையிலிருந்து என்னுடைய மணல் சிற்பக் கலையின் மூலம் இந்தியா பாகிஸ்தான் ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கு குட் லக்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்