மத்திய அரசு டாடா சன்ஸ் இடையே ஏர் இந்தியா கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்து
ஏர் இந்தியா பங்குகளை டாடா நிறுவனம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.;
பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை டாடா நிறுவனத்துக்கு விற்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் கடிதத்தை மத்திய அரசு கடந்த 11-ந்தேதி டாடா குழுமத்திடம் அளித்தது. இதன் அடுத்தகட்டமாக, ஏர் இந்தியா பங்குகளை டாடா நிறுவனம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இதில் மத்திய அரசும், டாடா சன்ஸ் நிறுவனமும் கையெழுத்திட்டதாக முதலீட்டு துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்தார்.