லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு..!

லடாக்கில் இன்று காலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2022-03-16 15:03 IST
கோப்புப் படம்
லடாக்,

லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் கூறியுள்ளது.

லே பகுதியில் இருந்து வடக்கு-வடகிழக்கில் 245 கிலோமீட்டர் தொலைவில் காலை 11.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. 

ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்