அயோத்தி கோயிலில் மனைவியுடன் சென்று வழிபட்ட துணை குடியரசு தலைவர்
துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தனது மனைவியுடன் அயோத்திக்கு சென்று சாமிதரிசனம் செய்தார்.;
அயோத்தி,
துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தனது மனைவியுடன் அயோத்திக்கு சென்ற அவர் ராமஜென்ம பூமியில் சாமிதரிசனம் செய்தார்.
இதற்காக ரயில் மூலம் லக்னோ வந்த அவரை, உத்தரபிரதேச கவர்னரும், துணை முதல் மந்திரியும் வரவேற்றனர். அவர்களும் வெங்கையா நாயுடுவுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான குழுவுடன் கலந்துரையாடிய அவர், அங்கிருந்து புகழ்பெற்ற அனுமன் கோவிலுக்கு புறப்பட்டார்.