என்ன மனித நேயம்...! ஊனமுற்ற முதியவரை குளிப்பாட்டி புதிய உடை உணவு வழங்கிய போலீஸ் அதிகாரி

ஷைஜு செய்த இந்த செயல் ஒட்டு மொத்த காவல்துறைக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2022-04-27 09:08 GMT
திருவனந்தபுரம்

கேரளா மாநிலம்  நெய்யாற்றின்கரை போலீஸ்நிலையத்தில்  சிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்ரி வருபவர்  விராலியைச் சேர்ந்த ஷைஜு. இவர்  நெய்யாற்றின்கரை ஆலும்மூடு சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஊனமுற்ற முதுயவர் ஒருவர் ஷைஜூவிடம் வந்து சோப்பு வாங்கி தரலாமா, குளித்து ரொம்ப நாட்கள் ஆயிடிச்சு என்று கேட்டார்.

அவர்  கேட்டவுடனே ஷைஜு அருகில் உள்ள ஒரு கடையில் இருந்து சோப்பை வாங்கி முதியோரிடம் கொடுத்துள்ளார்.  உடனே அந்த முதியவர் சோப்புடன் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயின் அருகே  சென்று  குளிக்க முயற்சிப்பதை ஷைஜு கவனித்தார். மேலும் ஊனமுற்ற முதியவர் உடலில் தண்ணீரை ஊற்றி குளிக்க முடியாமல் அவதியடைந்துள்ளார். 

இதனை பார்த்த உடனே ஷைஜு, பக்கத்து கடையில் இருந்து வாளியும் கோப்பையும் வாங்கி வந்து அந்த முதியவரைக் குளிக்க வைத்து, புது உடை மற்றும் உணவும் வாங்கி  கொடுத்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் செய்தியாளர்கள் இதனை படம் பிடித்து செய்தி ஆக்க அங்கு வந்ததும், அவர்களிடம் தான் செய்தது தனது  வேலையின் ஒரு பகுதி எனவும் தனது கடமை என்றும்  எளிதாக  சொல்லிவிட்டுச் சென்றார்.

ஷைஜு செய்த இந்த செயல் ஒட்டு மொத்த காவல்துறைக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்