உத்தரபிரதேசத்தில் சட்ட விரோத ஆயுத தயாரிப்பு நிறுவனம் அழிப்பு: 34 துப்பாக்கிகள் பறிமுதல் - 2 பேர் கைது

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2023-01-23 22:22 GMT

புதுடெல்லி,

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது டெல்லி-ஜம்மு நெடுஞ்சாலையில் உள்ள நரேலா பகுதியில் நவேத் ராணா (வயது 21) என்பவரை சமீபத்தில் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 10 கைத்துப்பாக்கிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான சலீம் (39) என்பவரை கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் சாம்லி மாவட்டத்தை சேர்ந்த அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சாம்லியில் உள்ள கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஆயுதம் தயாரிப்பு நிறுவனத்தையும் போலீசார் தற்போது அழித்து உள்ளனர். இந்த நடவடிக்கையில் மொத்தம் 34 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில் தலைநகரில் சட்ட விரோத ஆயுத கும்பல் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்