மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் 6 வயது சிறுவன் சாவு

மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் 6 வயது சிறுவன் பலியானான்.;

Update:2022-10-25 02:42 IST

பெலகாவி: பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா ஹத்தராகி கிராமத்தை சேர்ந்தவன் வர்தன் எரண்ணா(வயது 6). இந்த நிலையில் தீபாவளிக்கு துணி வாங்க மோட்டார் சைக்கிளில் தனது தந்தையுடன் எரண்ணா நேற்று மதியம் பெலகாவிக்கு சென்று கொண்டு இருந்தான். பெலகாவி பழைய காந்திநகர் பகுதியில் சென்ற போது அங்கு சிலர் பறக்கவிட்டு கொண்டு இருந்த பட்டத்தின் மாஞ்சா கயிறு வர்தனின் கழுத்தை அறுத்தது. இதில் ரத்தவெள்ளத்தில் வர்தன் மயங்கி விழுந்தான்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வர்தனின் தந்தை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வர்தனை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் வர்தன் இறந்து விட்டான். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மாலமாருதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்