காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தின் கரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-13 07:31 IST

கோப்புப்படம்

புதுச்சேரி,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக இன்று (13-01-2026) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே காரைக்கால் பகுதிகளில் விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமசிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்