மேலும் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமித்தார் மே.வங்க கவர்னர்..!

மேலும் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை மே.வங்க கவர்னர் நியமனம் செய்தார்.

Update: 2023-09-06 22:02 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கும், கவர்னர் ஆனந்த போசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கவர்னர் ஆனந்த போஸ் மாநில அரசுடன் விவாதிக்காமல் 16 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நேரடியாக நியமனம் செய்தார். இதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, கவர்னரால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்களின் சம்பளம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் முதல்-மந்திரியின் இந்த எச்சரிக்கையை புறக்கணிக்கும் விதமாக கவர்னர் ஆனந்த போஸ் மேலும் ஒரு பல்கலைக்கழக துணை வேந்தரை நியமித்துள்ளார்.

நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகர் கன்யாஸ்ரீ பல்கலைக்கழகத்தின் இடைக்கால துணைவேந்தராக காஜல் டே என்பவரை கவர்னர் நியமித்துள்ளதாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்