வி.சோமண்ணாவை முற்றுகையிட்டு சித்தராமையாவுக்கு ஆதரவாக கோஷம்

வருணா தொகுதியில் பிரசாரம் செய்த வி.சோமண்ணாைவ முற்றுைகயிட்டு சித்தராைமயாவுக்கு ஆதரவாக கோஷமிடப்பட்டதால், பா.ஜனதாவினர் போட்டிக்கு கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-04-24 00:15 IST

மைசூரு:-

சித்தராமையா- வி.சோமண்ணா

நட்சத்திர தொகுதியாக திகழும் வருணா சட்டசபை தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா 3-வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மந்திரி வி.சோமண்ணாவை பா.ஜனதா நிறுத்தியுள்ளது.

இந்த தொகுதியில் இருவருக்கும் இடையே வார்த்தை மோதலும், ஆதரவாளர்கள் மத்தியில் நீயா-நானா என விவாதமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் வருணா தொகுதி தேர்தல் களம் நாள்தோறும் புதுப்புது விவாதத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வருகிறது.

சித்தராைமயா ஆதரவு கோஷம்

இந்த நிலையில், மந்திரி வி.சோமண்ணா நேற்று வருணா தொகுதிக்கு உட்பட்ட புகதஹள்ளி கிராமத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் அங்கு காரில் வந்து இறங்கினார். அப்போது சிலர் அவரது காரை முற்றுகையிட்டு சித்தராமையாவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அதற்கு மந்திரி வி.சோமண்ணா பொறுமை காக்கும்படி கூறிவிட்டு, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த டாக்டர் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பிரசாரத்தில் அவர் பேச முயன்றார்.

அந்த சமயத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த பலரும் அவரை முற்றுகையிட்டு, சித்தராமையாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அவர்களை வி.சோமண்ணா சமாதானப்படுத்த முயன்றார். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து சித்தராமையாவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

பரபரப்பு

இதனால் அங்கு கூடியிருந்த பா.ஜனதா போட்டிக்கு வி.சோமண்ணாவுக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உண்டானது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்