சபரிமலையில் நெய் விற்பனை முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவு

சபரிமலையில் நெய் விற்பனையில் ரூ.35 லட்சத்துக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது.;

Update:2026-01-14 08:34 IST

சபரிமலை,

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் நெய்யில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இந்த முறைகேடு 2 மாதங்களுக்குள் நடந்து உள்ளது. நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. 2 மாதத்துக்குள் நெய் விற்பனையில் ரூ.35 லட்சத்துக்கும் மேல் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதால், நீண்ட காலத்தில் மற்றும் பிற வருவாய் வழிகளில் நடந்து இருக்கும் முறைகேட்டின் அளவை கற்பனை செய்வது கடினம்.

எனவே இந்த முறைகேடை லஞ்ச ஒழிப்புத்துறை நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகளை கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். அந்த குழு நேர்மையாக விசாரணை நடத்தி ஒரு மாத காலத்துக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த குழு கோர்ட்டுக்கு மட்டுமே பதில் கூற வேண்டும். இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு கோர்ட்டில் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்