மும்பை மாநகராட்சி தேர்தல்: இந்திய பங்குச் சந்தைக்கு நாளை விடுமுறை

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.;

Update:2026-01-14 10:33 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை, தானே, நவிமும்பை உள்பட 29 மாநகராட்சிகளில் 15-ந் தேதி (நாளை) தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 வரை நடக்கிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில், மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்