ஐதராபாத்தில் மத்திய ஆயுதப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ஐதராபாத்தில் மத்திய ஆயுதப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கோப்புப்படம்
ஐதராபாத்,
சத்தீஷ்கார் மாநிலத்தைச்சேர்ந்தவர் தேவேந்தர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டன் அருகே உள்ள சிகோட்டி தோட்டத்தில் அவர் மத்திய ஆயுதப்படையில் வீரராக பணிபுரிந்து வருகிறார். தேவேந்தர் நேற்று அதிகாலை தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.