கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1.49 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் : மத்திய நிதியமைச்சகம்

நடப்பு ஆண்டு கூடுதலாக 12% வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-03-01 10:16 GMT

 மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டன.

. நடப்பு ஆண்டு இதைவிட கூடுதலாக 12% வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்