திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம்

திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-08-06 05:00 GMT

திருப்பதி,

ஆந்திர முதல்-மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது. அவர் தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளை மறுநாள் நிறைவடைகிறது.

இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டி, புதிய அறங்காவலர் குழு தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார். கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார். மேலும் உள்ளூர்காரர் என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என கருதப்படுகிறது.

வரும் 16-ந் தேதிக்குள், அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வது குறித்து முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசித்து வருகிறார். இதில் தமிழகம், கர்நாடகம், டெல்லி, மராட்டியம் போன்ற மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் இருந்து அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்