மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்

மேகாலயா தலைமை நீதிபதியாக ரேவதி பிரசாந்த் மோகித் டேரே மற்றும் பாட்னா தலைமை நீதிபதியாக சங்கம் குமார் சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2026-01-01 21:49 IST

புதுடெல்லி,

மேகாலயா, பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேகாலயா தலைமை நீதிபதியாக ரேவதி பிரசாந்த் மோகித் டேரே மற்றும் பாட்னா தலைமை நீதிபதியாக சங்கம் குமார் சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

மேகலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரேவதி பிரசாந்த் மோகித் டேரோ மும்பை ஐகோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். அதேபோல, சங்கம் குமார் சாஹூ ஒடிசா நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். மேகாலயா தலைமை நீதிபதியாக உள்ள சோமென் சேன் கேரள ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்