மங்களூரு, ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவம் - வழக்கை என்ஐஏ-வுக்கு மாற்ற மாநில அரசு முடிவு

விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் மாநில அரசு முடிவு செய்துள்ளது

Update: 2022-11-24 14:14 GMT

மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்த ஒரு நபர், தேடப்பட்டு வந்த சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த பயங்கரவாதி ஷாரிக் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றதும், ஆட்டோவில் செல்லும்போது அது வெடித்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை என்ஐஏ-வுக்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் மாநில அரசு முடிவு செய்துள்ளது .வழக்கை உபா சட்டத்தின் கீழ் விசாரிக்க பரிந்துரை என கர்நாடக மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்