மேகாலயாவில் பட்ஜெட் கூட்டத்தொடர்: கவர்னர் இந்தியில் உரையாற்றியதால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

மேகாலயாவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

Update: 2023-03-20 23:30 GMT

ஷில்லாங், m

மேகாலயாவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கவர்னர் பாகு சவுகான் கூட்டத் தொடரை தொடங்கி வைத்துப் பேசினார். கடந்த பிப்ரவரியில் கவர்னராக பொறுப்பேற்ற அவரது கன்னி உரை இதுவாகும்.

அங்கு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) ஆளும்கட்சியாக உள்ளது. கான்ராட் சங்மா கடந்த 9-ந்தேதி 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்று உள்ளார். மக்கள் குரல் கட்சி (வி.பி.பி.) கட்சி எதிர்கட்சிகளில் ஒன்றாக செயல்படுகிறது. அதற்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

நேற்று, கவர்னர் சவுகான் சட்டசபையில் இந்தியில் உரையாற்றத் தொடங்கியதும் வி.பி.பி. கட்சி எம்.எல்.ஏ.க்கள் குறுக்கிட்டு, கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் முறையிட்டனர்.

அதற்கு சபாநாயகர் சங்மா எதிர்க்கட்சியினர் கோரிக்கையை ஏற்காததால், அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்