மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

மைசூருவில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-10-01 18:45 GMT

மைசூரு:

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே பகுதியை சேர்ந்தவர் லோகித் (வயது 31). இவர் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், மைசூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி இரவு லோகித் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து லோகித்தின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தனர்.

இதையடுத்து லோகித்தின் இதயம், 2 சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை செய்து தானமாக பெறப்பட்டது. இதையடுத்து பெங்களூரு மற்றும் கே.ஆர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களுக்கு லோகித்தின் உறுப்புகள் பொருத்தப்பட்டது. மேலும் அவரது இதயம் மைசூருவில் இருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஜீரோ போக்குவரத்தில் கொண்டு செல்லப்பட்டது. லோகித்தின் உடல் உறுப்புகள் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்