பனிமூட்டத்தில் மறைந்த தாஜ்மகால் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தாஜ்மகால் தற்போது அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது.;
லக்னோ,
இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சாலைகளில் பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மகால் தற்போது அடர்ந்த பனிமூட்டத்தால் சூழப்பட்டு, பார்வையில் இருந்து மறைந்ததுள்ளது. இதனால், தாஜ் வியூ பாயிண்ட் பகுதியில் இருந்து தாஜ்மகாலின் முழுமையான அழகை கண்டு ரசிக்க முடியாமல், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.