சபரிமலை சீசன் மொத்த வருமானம் ரூ.357.47 கோடி - தேவசம்போர்டு தகவல்

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 10.35 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-01-20 22:44 IST

சபரிமலை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மூலம் 357 கோடியே 47 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாத் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 10.35 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதில் அரவணை மூலம் 146 கோடியே 99 லட்சம் ரூபாய், அப்பம் மூலம் 17 கோடியே 64 லட்சம் ரூபாய் மற்றும் பக்தர்களின் காணிக்கையை சேர்த்து மொத்தமாக 357 கோடியே 47 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்